குழந்தைகள் டிவி பார்க்கட்டும் | Ep-46 | Ajaykumar Periasamy | Tamil Podcast
Description
9 வயது.. மொத்தமாக மாற்றிய ஒரு டிவி ஷோ.. "செவ்வாய் நாயகி" சுவாதி மோகன் உருவான குட்டி ஸ்டோரி!
வாஷிங்டன்: நாம் சின்ன வயதில் அதிகம் பார்த்த ஃபேண்டசி தொடர் என்னவாக இருந்திருக்கும்? சக்திமான்? சிலர் 'ஸ்மால் ஒண்டர்' என்று கூடச் சொல்லக்கூடும். ஆனால் அப்போது ரசித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றிருப்போம் ஆனால், 9 வயசில் பார்த்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் தொடர், சுவாதி மோகன் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுள்ளது.
ஆம்.. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகன் பற்றிதான் சொல்கிறோம். பெர்சிவரன்ஸ் ரோவர் சரியாக நேற்று வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் சுவாதி மோகன் "டச் டவுன் உறுதிப்படுத்தப்பட்டது!
கடந்தகால வாழ்க்கையை தேடத் தொடங்க தயாராக உள்ள ரோவர், செவ்வாய் கிரக மேற்பரப்பில் விடாமுயற்சி பாதுகாப்பாக உள்ளது, " என்ற தகவலை அவர் கம்பீரமாக கூறியபோது மொத்த நாசா குழுவும் பூரித்துப்போனது. சரி ரோவரை விடுங்க. சுவாதி மோகன் யார் தெரியுமா. சாட்சாத் இந்திய வம்சாவளி பெண். பெங்களூர் பெண். ஆனால் சிறு வயதிலேயே பெற்றோர் அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, சுவாதி மோகனுக்கும் குழந்தை பருவத்தில் அடுத்து என்னவாகப்போகிறோம் என்ற ஐடியாவெல்லாம் இல்லை.
ஆனால் 9 வயதாக இருந்தபோது முதன்முறையாக star trek சயின்ஸ் பிக்ஷன் நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அமெரிக்காவில் அப்போது ரொம்பவே ஃபேமசாக இருந்த சீரிஸ் இதுவாகும். இதை பார்த்ததும் மனதிற்குள் ஒரு ஸ்பார்க். இந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என்று அவரது உள்ளம் துடிக்கத் தொடங்கியது. விஞ்ஞானியாக உருவெடுக்க ஆசை துளிர்த்தது.
"இது 9 வயது ஆசை. ஆனால் 16 வயதாக இருந்தபோது, குழந்தை மருத்துவராக வேண்டும் என்று கூட விரும்பினேன்." என்று சிரித்தபடியே சொல்லும் சுவாதி மோகன், நல்ல வேளையாக கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியில்லாவிட்டால் உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாறியிருக்க முடியாதே. ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது.
நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். நாசாவின் செவ்வாய் ஆய்வு ரோவர் மிஷன் துவங்கியது முதலே, அந்த குழுவின் உறுப்பினராக உள்ளார். இது தவிர, அவர் பல முக்கியமான பணிகளில் சிறப்பாக பங்களித்தவர்தான். காசினி (சனி கிரக ஆய்வு பணி) திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஆனால் செவ்வாய் கிரகத்தில் ரோவர் இறங்கியபோது, அதை கட்டுப்படுத்தி, வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு சுவாமி கரங்களில்தான் இருந்தது. மொத்த நாசா குழுவும் கண்களை சிமிட்ட கூட மறந்து பரபரப்போடு பார்த்துக் கொண்டு இருந்தபோது வெற்றிகரமாக லேண்டிங் செய்து அசத்தியுள்ளார் சுவாதி.
ஹேட்ஸ்ஆப்!
🏆வேண்டுமா வெற்றிக்கான மாற்றம்..
கிளிக் செய்து கேளுங்கள் இப்போதே.
https://linktr.ee/TheMillionaireMindsetFM
www.facebook.com/AjaykumarPeriasamy
www.youtube.com/AjaykumarPeriasamy
நீங்கள் விரும்புவதைக் கண்டுபிடித்து உங்கள் இலக்குகளை அடைய நான் உங்களுக்கு உதவ முடியும்,
நீங்கள் தேடும் தெளிவை உங்களுக்கு வழங்குவதே எனது ஒரே குறிக்கோள்.
For Personal Coaching, Speeches and Personal Development Consultancy : ajaykumarperiasamy@gmail.com
உங்க வாழ்வியல் ஆலோசனைகளுக்கு அழைக்கவும்:
அஜய்குமார் பெரியசாமி வாழ்வியல் மனமாற்றப் பயிற்சியாளர்























